Acts 22:26 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதைக் கேட்ட நூற்றுக்குத் தலைவன், படைத்தளபதியிடம் சென்று இதை அறிவித்தான். அவன் அந்தத் தலைவனிடம், “நீர் என்ன செய்யப்போகிறீர்? இவன் ஒரு ரோம குடிமகன்” என்றான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இதைக் கேட்ட நூற்றுக்குத் தளபதி, படைத்தளபதியிடம் சென்று, “நீர் செய்யவிருப்பது என்ன? இவன் ஒரு ரோம குடிமகன் அல்லவா?” என்று எச்சரித்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.
Tamil Bible Romanised 2017
noot'rukku athibathi athaikkeattu, seanaabathiyinidaththi'rkup poay, athai a'riviththu: neer seyyappoagi'rathaikku'riththu echcharikkaiyaayirum; intha manushan roaman en'raan.
Tamil OV
நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாதிபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான்.