Acts 23:5 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்குப் பவுல்: சகோதரர்களே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாதே” என்று எழுதியிருக்கிறதே என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் தலைமை மதகுரு என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உங்கள் மக்களின் ஆளுநரைக் குறித்துத் தீமையாய்ப் பேச வேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்குப் பவுல்: சகோதரர்களே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாதே என்று எழுதியிருக்கிறதே என்றான்.
Tamil Bible Romanised 2017
atha'rkup pavul: sagoathararea, ivar pirathaana aasaariyaren'ru enakkuth theriyaathu; un janaththin athibathiyaith theethu sollaayaaga en'ru ezhuthiyirukki'rathea en'raan.
Tamil OV
அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதானஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.