Acts 7:14 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இதன்பின்பு யோசேப்பு தூதனுப்பி, கானான் நாட்டிலிருந்த தனது தகப்பனான யாக்கோபையும் தம்முடைய குடும்பத்தார் அனைவரையும் அழைப்பித்தார். அவர்கள் எல்லாருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
Tamil Bible Romanised 2017
pinbu yoaseappu, thannudaiya thagappan yaakkoabum thannudaiya inaththaar yaavarumaagiya, ezhubaththainthupearai azhaikka anuppinaan.
Tamil OV
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார்.