Amos 4:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மலைகளை உருவாக்குகிறவரும், காற்றை உண்டாக்குகிறவரும் அவரே, மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே, பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே, சேனைகளின் இறைவனாகிய யெகோவா என்பது அவர் பெயர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
Tamil Bible Romanised 2017
avar parvathangga'lai uruvaakkinavarum, kaat'raich sirushdiththavarum, manushanudaiya ninaivuga'l innathen'ru avanukku ve'lippaduththugi'ravarum, vidiya'rkaalaththai anthagaaramaakkugi'ravarum, boomiyinudaiya uyarntha sthaanangga'linmeal ulaavugi'ravarumaayirukki'raar; seanaiga'lin theavanaagiya karththar enbathu avarudaiya naamam.
Tamil OV
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் யார்? நானே மலைகளைப் படைத்தவர். நான் உங்கள் இருதயங்களையும் உண்டாக்கினவர். நான் ஜனங்களுக்கு எவ்வாறு பேசவேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன். நான் இருளை விடியற் காலையாக மாற்றினேன். நான் பூமியின் மேலுள்ள மலைகைளின் மேல் நடக்கிறேன். நான் யார்? எனது நாமம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர்.