Amos 5:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ, ஐயோ, என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும். பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும். அழுவதற்காக விவசாயிகளும், புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
Tamil Bible Romanised 2017
aathalaal aa'ndavarum seanaiga'lin theavanumaagiya karththar sollugi'rathu ennaven'raal: ellaaththerukka'lilum pulambal u'ndaagum; ellaa veethiga'lilum aiyoa! aiyoa! en'ru oalamiduvaarga'l; payiridugi'ravarga'laith thukkangko'ndaadugi'ratha'rkum, oppaaripaada a'rinthavarga'laip pulambugi'ratha'rkum varavazhaippaarga'l.
Tamil OV
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார். “ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள். ஜனங்கள் தெருக்களில் அழுதுகொண்டிருப்பார்கள். ஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள்.
Recommended Reading