Amos 6:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கல்னே பட்டணத்துக்குப் போய் அதைப் பாருங்கள், அங்கிருந்து ஆமாத் எனும் பெருநகரத்திற்குப் போங்கள். அதன்பின் பெலிஸ்தியாவிலுள்ள காத்திற்குச் செல்லுங்கள். உங்கள் இரு அரசுகளைவிட அவை சிறந்தவையோ? அவர்களுடைய நாடு உங்கள் நாட்டைவிடப் பெரியதோ? அவை எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள்.
Tamil Bible Romanised 2017
neengga'l kalneamattum sen'ru, avvidaththilirunthu aamaath ennum periya patta'naththukkup poay, pelistharudaiya kaathpatta'naththukku i'ranggi, avaiga'l intha raajyangga'laippaarkkilum nallavaiga'loa en'rum, avaiga'lin ellaiga'l ungga'l ellaiga'laippaarkkilum visthaaramaanavaiga'loa en'rum paarungga'l.
Tamil OV
நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப்போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கல்னேவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கிருந்து ஆமாத் என்னும் பெருநகருக்குப் போங்கள். பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள். நீங்கள் இந்த இராஜ்யங்களை விடச் சிறந்தவர்களா? இல்லை. அவர்கள் நாடுகள் உங்கள் நாட்டைவிட பெரியவையா?