Colossians 1:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்றும், எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்றும், எல்லா நல்ல வேலைகளிலும் கனிகொடுக்க வேண்டுமென்றும் நாங்கள் இப்படி மன்றாடுகிறோம். இறைவனைப்பற்றிய அறிவில் நீங்கள் வளரவேண்டும் என்றும்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மேலும், நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும். பல நற்செயல்களின் ஊடாக கனி கொடுத்து, இறைவனைப் பற்றிய அறிவில் வளர்ச்சி அடைந்து,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
Tamil Bible Romanised 2017
sagalavitha na'rkiriyaiga'lumaagiya kaniga'laith thanthu, theavanai a'rigi'ra a'rivil viruththiyadainthu, karththarukkup piriyamu'ndaaga avarukkup paaththiraraay nadanthuko'l'lavum,
Tamil OV
சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும்,