Daniel 9:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இஸ்ரவேலர்கள் எல்லோரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்திற்குச் செவிகொடுக்காமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் கட்டளையிடப்பட்ட தண்டனையும் எங்கள்மேல் ஊற்றப்பட்டன.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேலர் யாவரும் உமது சட்டத்தை மீறினார்கள். உமக்குக் கீழ்ப்படிய மறுத்து வழிவிலகிப்போனார்கள். “ஆகவே நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தினால், இறைவனின் அடியவனாகிய மோசே தனது சட்ட புத்தகத்தில் எழுதியுள்ளபடி சாபமும், ஆணையிட்டுக்கூறிய நியாயத்தீர்ப்பும் எங்கள்மேல் வந்தன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இஸ்ரவேலர்கள் எல்லோரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்திற்குச் செவிகொடுக்காமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் கட்டளையிடப்பட்ட தண்டனையும் எங்கள்மேல் ஊற்றப்பட்டன.
Tamil Bible Romanised 2017
isravealar ellaarum umathu niyaayappiramaa'naththai mee'ri, umathu saththaththukkuch sevikodaamal vilagippoanaarga'l. avarukku viroathamaagap paavagnseythoam; aagaiyaal theavanudaiya thaasanaagiya moaseayin niyaayappiramaa'nap pusthagaththil ezhuthiyirukki'ra saabamum aa'naiyaakkinaiyum engga'lmeal soriyappattana.
Tamil OV
இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இஸ்ரவேலில் உள்ள எந்த ஜனங்களும் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவில்லை. மோசேயின் சட்டத்தில் சாபங்களும் வாக்குத்தத்தங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. (மோசே தேவனுடைய ஊழியன்). அச்சாபங்களும் வாக்குத்தத்தங்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. அவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.