Deuteronomy 1:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பயங்கரமான பெரிய வனாந்திர வழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு, நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே நாம் ஓரேபிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டை நோக்கிப் போனோம். பின்பு நீங்கள் கண்ட அந்த விசாலமும், பயங்கரமுமான பாலைவனத்தின் வழியே அங்குபோய் காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பயங்கரமான பெரிய வனாந்திர வழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
Tamil Bible Romanised 2017
nammudaiya theavanaagiya karththar namakkuk katta'laiyittapadiyea, naam oareabaivittup pirayaa'nampa'n'ni, emoariyarin malainaatti'rku nearaaga neengga'l ka'nda anthap bayanggaramaana periya vanaantharavazhi muzhuvathum nadanthuvanthu, kaatheasbarneayaavilea searnthoam.
Tamil OV
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“பின் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தோம். ஓரேப் மலையை விட்டு (சீனாய்), எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்குப் பயணம் செய்தோம். நீங்கள் கண்ட பெரியதும் கொடூரமானதுமாகிய பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்து காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.