Deuteronomy 25:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சரியானதும், நீதியானதுமான படிக்கற்களும், அளவைகளுமே உங்களிடம் இருக்கவேண்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீடித்து வாழ்வீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
un theavanaagiya karththar unakkuk kodukkum theasaththil un naadka'l neediththirukkumpadi, ku'raiyat'ra sumuththiraiyaana ni'raikallum, ku'raiyat'ra sumuththiraiyaana padiyum unnidaththil irukkavea'ndum.
Tamil OV
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சரியானதாகவும் பிழையற்றதாகவும் உள்ள எடைக்கற்களையும், அளவு கருவிகளையுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்போது நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீண்ட காலம் வாழலாம்.