Deuteronomy 26:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த விதிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றும்படி இன்று கட்டளையிட்டிருக்கிறார். எனவே உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் இவற்றைக் கவனமாய் கைக்கொள்ளுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய்.
Tamil Bible Romanised 2017
inthak katta'laiga'linpadiyum niyaayangga'linpadiyum nee seyyumporuttu, in'ru un theavanaagiya karththar unakkuk katta'laiyidugi'raar; aagaiyaal un muzhu iruthayaththoadum un muzhu aaththumaavoadum avaiga'laik kaaththu nadakkakkadavaay.
Tamil OV
இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும் பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டைளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“இந்த எல்லாச் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய, உங்கள் தேவனாகிய கர்த்தர் இன்று உங்களுக்குக் கட்டளையிடுகின்றார். நீங்கள் உங்கள் ஆத்ம திருப்தியுடனும், முழு மனதோடும், அவற்றைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாய் இருங்கள்!