Deuteronomy 33:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தன்னுடைய தகப்பனையும், தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி, ‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான். அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை. தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து, உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தன்னுடைய தகப்பனையும், தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
Tamil Bible Romanised 2017
than thagappanukkum than thaaykkum: naan ungga'laip paarean en'ru solli, than sagoathararai anggigariyaamal, than pi'l'laiga'laiyum a'riyaamalirukki'ravan vasamaay avaiga'l iruppathaaga; avarga'l ummudaiya vaarththaiga'laik kaikko'ndu, ummudaiya udanpadikkaiyaik kaakki'ravarga'l.
Tamil OV
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நீ உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள். அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவர்கள் தமது சகோதரர்களையும் அடையாளம் காணவில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகள் மேலும் அக்கறை செலுத்தவில்லை. ஆனால், அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் உமது உடன்படிக்கையைக் காத்தார்கள்.