Deuteronomy 4:38 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னிலும் பலத்த பெரிய மக்களை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச்சொந்தமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்திற்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் உங்களைவிட பெரிதும், வல்லமையும் உள்ள நாடுகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, இன்று இருக்கிறபடி அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுப்பதற்காக உங்களை அவர் அதற்குள் கொண்டுவந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன்னிலும் பலத்த பெரிய மக்களை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச்சொந்தமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்திற்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
Tamil Bible Romanised 2017
unnilum balaththa periya jaathiga'lai unakku munnin'ru thuraththavum, unnai azhaiththukko'ndupoay, innaa'lil irukki'rathupoala, avarga'l theasaththai unakkuch suthantharamaagak kodukkavum, unnaith thamathu mugaththukkumun thamathu miguntha vallamaiyinaal egipthilirunthu pu'rappadappa'n'ninaar.
Tamil OV
உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீங்கள் முன்னேறியபொழுது, உங்களைவிடவும் பெரியதும் வலிமை மிக்கதுமான ஜனங்களை கர்த்தர் வெளியில் துரத்தினார். அந்நாடுகளுக்குள் உங்களை வழிநடத்தினார். நீங்கள் வாழ்வதற்காக உங்களுக்கு அவர்களுடைய நாடுகளைக் கொடுத்தார். இன்றும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்.