Deuteronomy 5:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ, உன் எருதோ, கழுதையோ, உன் மிருகங்களில் எதுவோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீ ஓய்வெடுப்பதுபோலவே உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் ஓய்வெடுக்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
Tamil Bible Romanised 2017
eazhaam naa'loa un theavanaagiya karththarudaiya oayvunaa'l; athilea neeyaanaalum, un kumaaranaanaalum, un kumaaraththiyaanaalum, un vealaikkaaranaanaalum, un vealaikkaariyaanaalum, un eruthaanaalum, un kazhuthaiyaanaalum, unakku irukki'ra mat'rentha mirugajeevanaanaalum, un vaasalga'lil irukki'ra anniyanaanaalum yaathoru vealaiyum seyyavea'ndaam; nee i'laippaa'ruvathupoala un vealaikkaaranum un vealaikkaariyum i'laippaa'ravea'ndum;
Tamil OV
ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால், ஏழாவது நாளோ உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான ஓய்வுநாள். எனவே, அந்த நாளில் யாரும் வேலை செய்யக்கூடாது. நீ மட்டுமின்றி, உனது குமாரர்களும், குமாரத்திகளும், வேலைக்காரர்களும், உன் வீட்டிலுள்ள மாடு, கழுதை மற்றும் பிற விலங்குகளும்கூட வேலைச் செய்யக்கூடாது. உன் வீட்டிலிருக்கின்ற அந்நியர்களும் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. நீ ஓய்வு எடுப்பது போல உன் அடிமைகள் எல்லோருமே ஓய்வு எடுக்க வேண்டும்.