Ephesians 2:15 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
கட்டளைகளும் விதிமுறைகளும் அடங்கிய நீதிச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கினார். இந்த இரு பிரிவினரையும் தம்மில் இணைந்திருக்கும் ஒரு புது மனித இனமாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தவே அப்படிச் செய்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி,
Tamil Bible Romanised 2017
sattathittangga'laagiya niyaayappiramaa'naththaith thammudaiya maamsaththinaalea ozhiththu, iruthi'raththaaraiyum thamakku'l'laaga orea puthiya manushanaagach sirushdiththu, ippadich samaathaanampa'n'ni,
Tamil OV
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார்.