Esther 10:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யூதனான மொர்தெகாய் மேன்மையில் அரசனுக்கு அடுத்ததாய் இருந்தான். அவன் தனது மக்களின் நலனுக்காக உழைத்ததினாலும், எல்லா யூதர்களுடைய முன்னேற்றத்துக்காகப் பேசியதினாலும் அவன் யூதர்கள் மத்தியிலும் முதன்மை பெற்றவனாயிருந்தான். அவன் தன் சகோதரரான மற்ற யூதர்களினால் உயர்வாய் மதிக்கப்பட்டவனுமாயிருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
yoothanaagiya morthekaay raajaavaagiya agaasvearuvukku ira'ndaavathaanavanum, yootharukku'l periyavanum, than thira'laana sagoathararukkup piriyamaanavanumaayirunthathum an'rith than janangga'ludaiya nanmaiyai naadi, than kulaththaarukkellaam samaathaanamu'ndaagap peasugi'ravanumaayirunthaan.
Tamil OV
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதனான மொர்தெகாய் ராஜாவுக்கு அடுத்த இரண்டாவது முக்கிய மனிதனானான். யூதர்களில் மொர்தெகாய் மிக முக்கிய மனிதன் ஆனான். அவனை மற்ற யூதர்கள் மிகவும் மதித்தனர். அவர்கள் மொர்தெகாயை மதித்தனர். ஏனென்றால், அவன் தன் ஜனங்களின் நன்மைக்காக கடினமான வேலைகளைச் செய்தான். மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தான்.