Esther 8:12 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்தந்த நாடுகளில் இருக்கிற யூதர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய உயிரைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் எதிரிகளாகிய மக்களும், தேசத்தைச் சேர்ந்தவர்களுமான எல்லோரையும், அவர்களுடைய குழந்தைகளையும், பெண்களையும் கொன்று அழிக்கவும், அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதர்களுக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அகாஸ்வேரு அரசனின் எல்லா மாகாணங்களிலும் யூதர்கள் இதைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாள், ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளாயிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்தந்த நாடுகளில் இருக்கிற யூதர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய உயிரைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் எதிரிகளாகிய மக்களும், தேசத்தைச் சேர்ந்தவர்களுமான எல்லோரையும், அவர்களுடைய குழந்தைகளையும், பெண்களையும் கொன்று அழிக்கவும், அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதர்களுக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
Tamil Bible Romanised 2017
anthanthap patta'naththilirukki'ra yoothar on'raaych searnthu, thangga'l piraa'nanaik kaappaat'ravum, thangga'lai viroathikkum saththurukka'laagiya janaththaarum theasaththaarumaana ellaaraiyum, avarga'l kuzhanthaiga'laiyum, sthireega'laiyum azhiththuk kon'ru nirmoolamaakkavum, avarga'l udaimaiga'laik ko'l'laiyidavum, raajaa yootharukkuk katta'laiyittaar en'ru ezhuthiyirunthathu.
Tamil OV
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இதைச் செய்வதற்காக யூதர்களுக்கு பன்னிரண்டாவது மாதமான ஆதார் மாதத்தின் 13வது நாள் நியமிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் இதனை அகாஸ்வேரு ராஜாவின் இராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.