Exodus 29:25 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, யெகோவாவுடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலி.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகன காணிக்கைகளுடன் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக எரிக்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.
Tamil Bible Romanised 2017
pinbu avaiga'lai avarga'l kaiga'lilirunthu eduththu, balipeedaththinmeal sarvaangga thaganabaliyoadu vaiththu, karththarudaiya sannithaanaththil sugantha vaasanaiyaagath thagikkakkadavaay; ithu karththarukkuch seluththappadum thaganabali.
Tamil OV
பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின்பு அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் ஆட்டுக்கடாவோடு பலிபீடத்தில் சுட்டெரி. இது நெருப்பின் மூலமாக தேவனுக்குத் தரப்படும் தகன பலியாகும். அதன் சுகந்த வாசனை கர்த்தருக்கு ஏற்றது.