Ezekiel 10:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து நெருப்பை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே நுழைந்து சக்கரங்கள் அருகிலே நின்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா மென்பட்டு உடை உடுத்தியிருந்த மனிதனிடம், “கேருபீன்களுக்கு நடுவிலிருக்கும் சக்கரங்களின் இடையிலிருந்து நெருப்பை எடு” எனக் கட்டளையிட்டார். உடனே அம்மனிதன் உள்ளே போய் ஒரு சக்கரத்தினருகே நின்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து நெருப்பை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே நுழைந்து சக்கரங்கள் அருகிலே நின்றான்.
Tamil Bible Romanised 2017
avar sa'nalnool anggi thariththiruntha purushanai noakki: nee kearubeenga'lukku'l sakkarangga'lin naduvilirunthu akkiniyai edu en'ru katta'laiyittavudanea, avan u'l'lea piraveasiththuch sakkarangga'la'ndaiyilea nin'raan.
Tamil OV
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான்.