Ezekiel 15:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil Bible Romanised 2017
en mugaththai avarga'lukku viroathamaagath thiruppuvean; avarga'l oru akkiniyilirunthu neenggith thappinaalum, vea'rea akkini avarga'laip padchikkum; appadiyea naan en mugaththai avarga'lukku viroathamaayth thiruppumpoathu, naan karththar en'ru a'rinthuko'lveerga'l.
Tamil OV
என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். ஆனால் ஜனங்களில் சிலர் முழுவதும் எரியாத குச்சிகளைப்போன்றுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை. அந்த ஜனங்களை நான் தண்டித்தேன் என்பதை நீ பார்ப்பாய். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்!