Ezekiel 16:51 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ செய்த பாவங்களில் பாதியையும் சமாரியா செய்யவில்லை; நீ உன்னுடைய சகோதரிகளைவிட உன்னுடைய பாவங்களைப் பெருகச்செய்து, நீ செய்த உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்தாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீ செய்த பாவங்களில் பாதியையேனும் சமாரியா செய்யவில்லை. அவர்கள் அருவருப்பான செயல்களை நீ செய்தாய். நீ செய்த இவை எல்லாவற்றினாலும் உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காணும்படி செய்தாய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ செய்த பாவங்களில் பாதியையும் சமாரியா செய்யவில்லை; நீ உன்னுடைய சகோதரிகளைவிட உன்னுடைய பாவங்களைப் பெருகச்செய்து, நீ செய்த உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்தாய்.
Tamil Bible Romanised 2017
nee seytha paavangga'lil araivaasiyum samaariyaa seyyavillai; nee un sagoathariga'laippaarkkilum un paavangga'laip perugappa'n'ni, nee seytha un ellaa aruvaruppuga'linaalum avarga'lai neethiyu'l'lavarga'len'ru vi'langgappa'n'ninaay.
Tamil OV
நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன் பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் சொன்னார்: “நீ செய்த தீயச் செயல்களில் பாதி அளவுக்கூட சமாரியா செய்யவில்லை. நீ சமாரியாவை விடப் பல மடங்கு தீமைகளைச் செய்திருக்கிறாய். நீ உன் சகோதரிகளை விடப் பல மடங்கு பாவங்களைச் செய்திருக்கிறாய். சோதோமும் சமாரியாவும் உன்னோடு ஒப்பிடும்போது நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள்.