Ezekiel 16:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன்னுடைய காலம் பருவகாலமாக இருந்தது; அப்பொழுது என்னுடைய ஆடையை உன்மேல் விரித்து, உன்னுடைய நிர்வாணத்தை மூடி, உனக்கு வாக்குக்கொடுத்து, உன்னுடன் உடன்படிக்கைசெய்தேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இந்த விதமாக நீ என்னுடையவளாக ஆனாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘பின்பு நான் அவ்வழியாய் போகையில், உன்னைப் பார்த்தபோது நீ காதலிக்கத்தக்க பருவம் உள்ளவளாய் இருந்ததைக் கண்டேன். எனவே நான் என் உடையை ஓரத்தை உன்மீது விரித்து, உன் நிர்வாணத்தை மூடினேன். நான் உனக்கு மனப்பூர்வமாய் ஆணையிட்டு உன்னுடன் உடன்படிக்கையும் செய்தேன். நீ என்னுடையவளானாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன்னுடைய காலம் பருவகாலமாக இருந்தது; அப்பொழுது என்னுடைய ஆடையை உன்மேல் விரித்து, உன்னுடைய நிர்வாணத்தை மூடி, உனக்கு வாக்குக்கொடுத்து, உன்னுடன் உடன்படிக்கைசெய்தேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இந்த விதமாக நீ என்னுடையவளாக ஆனாய்.
Tamil Bible Romanised 2017
naan un arugea kadanthupoanapoathu, unnaip paarththean; ithoa, un kaalam paruvakaalamaayirunthathu; appozhuthu en vasthiraththai unmeal viriththu, un nirvaa'naththai moodi, unakku aa'naiyittukkoduththu, unnoadu udanpadikkai pa'n'ninean en'ru karththaraagiya aa'ndavar sollugi'raar; ivvithamaay nee ennudaiyava'laanaay.
Tamil OV
நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து,, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கைபண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உன்னை முழுவதாய் பார்த்தேன். நீ மணம் செய்ய தயாராக இருப்பதைப் பார்த்தேன். எனவே நான் எனது ஆடைகளை உன்மேல் விரித்து உனது நிர்வாணத்தை மறைத்தேன். நான் உன்னை மணந்துகொள்வதாய் வாக்களித்தேன். நான் உன்னோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தேன். நீ என்னுடையவளானாய்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: