Ezekiel 17:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்காக யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என்னுடைய ஆணையை அசட்டைசெய்ததையும், என்னுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரச்செய்வேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் வாழ்வது நிச்சயம்போலவே, அவன் உதாசீனம் செய்த என் சத்தியத்தையும், அவன் மீறிய என் உடன்படிக்கையையும் நான் அவன் தலைமீது வரப்பண்ணுவேன் என்பதும் நிச்சயம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்காக கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என்னுடைய ஆணையை அசட்டைசெய்ததையும், என்னுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரச்செய்வேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Tamil Bible Romanised 2017
athinimiththam karththaraagiya aa'ndavar sollugi'rathu ennaven'raal: avan en aa'naiyai asattaipa'n'ninathaiyum, en udanpadikkaiyai mu'riththuppoattathaiyum, naan avanudaiya thalaiyinmeal varappa'n'nuvean en'ru en jeevanaikko'ndu sollugi'rean.
Tamil OV
அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆணையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது ஆண்டவரான கர்த்தர் இந்த வாக்குறுதியைச் செய்கிறார்: “எனது உயிரின்மேல், நான் யூதாவின் ராஜாவைத் தண்டிப்பதாக வாக்குரைத்தேன். ஏனென்றால் அவன் எனது எச்சரிக்கையை அசட்டை செய்தான். அவன் எங்கள் ஒப்பந்தத்தை உடைத்தான்.