Ezekiel 17:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இஸ்ரவேலின் உயரமான மலையிலே அதை நாட்டுவேன்; அது கிளைகளைவிட்டு, பழம்தந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே எல்லாவித பறவைவகைகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தங்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அதை நான் நாட்டுவேன். அது கிளைகளைப் பரப்பி, பழங்களைக் கொடுத்து, சிறப்பான கேதுரு மரமாகும். எல்லாவித பறவைகளும் அதில் கூடுகட்டும். அதன் கிளைகளின் நிழலிலே அவை தஞ்சமடையும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இஸ்ரவேலின் உயரமான மலையிலே அதை நாட்டுவேன்; அது கிளைகளைவிட்டு, பழம்தந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே எல்லாவித பறவைவகைகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தங்கும்.
Tamil Bible Romanised 2017
isravealin uyaramaana parvathaththilea athai naattuvean; athu koppuga'lai vittu, kanithanthu, magimaiyaana keathuruvaagum; athin keezhea sagalavitha padchijaathiga'lum thanggi, athin ki'laiga'lin nizhalilea thaabarikkum.
Tamil OV
இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன். அக்கிளை மரமாக வளரும். அது கிளைகளாக வளர்ந்து கனிதரும். அது அழகான கேதுரு மரமாகும். பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும். பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.