Ezekiel 19:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகிளைகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன்னுடைய உயரத்தால் தன்னுடைய திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றியது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதன் கிளை உறுதியாய் இருந்ததினால் அரச செங்கோலுக்குத் தகுதியாயிற்று. அடர்ந்து வளர்ந்த மற்ற இலைகளுக்கு மேலாய் அது உயர்ந்து நின்றது. தன் உயரத்தாலும், பல கிளைகளாலும் அது சிறப்பாய்க் காட்சியளித்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகிளைகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன்னுடைய உயரத்தால் தன்னுடைய திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றியது.
Tamil Bible Romanised 2017
aa'lugi'ravarga'lin senggoalukkeat'ra balaththa koppuga'l atha'rku irunthathu; athin va'larththi adarththiyaana ki'laiga'lukku'l'lea uyara oanggi, than uyarththiyinaalea than thira'laana kodiga'loadungkoodath thoan'rit'ru.
Tamil OV
ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகொப்புகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன் உயர்த்தியினாலே தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள். அந்தக் கிளைகள் கைத்தடிகளைப் போன்றிருந்தன. அக்கிளைகள் ராஜாவின் செங்கோலைப் போன்றிருந்தன. அத்திராட்சைக் கொடி மேலும், மேலும் உயரமாக வளர்ந்தது, அது பல கிளைகளைப் பெற்று மேகங்களைத் தொட்டன.