Ezekiel 19:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆனாலும் அது கோபமாகப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் பழம் காய்ந்துபோனது; அதின் பலத்த கிளைகள் முறிந்து, பட்டுப்போயின; நெருப்பு அவைகளைச் சுட்டெரித்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், அந்தத் திராட்சைக்கொடி கடுங்கோபத்தோடு வேரோடு பிடுங்கப்பட்டுத் தரையில் எறியப்பட்டது. கீழ்க்காற்று அதனை வாடப்பண்ணி பழங்களும் உதிர்க்கப்பட்டன. அதன் பலத்த கிளைகள் வாடிப்போயின. நெருப்பு அவைகளை எரித்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆனாலும் அது கோபமாகப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் பழம் காய்ந்துபோனது; அதின் பலத்த கிளைகள் முறிந்து, பட்டுப்போயின; நெருப்பு அவைகளைச் சுட்டெரித்தது.
Tamil Bible Romanised 2017
aanaalum athu ukkiramaayp pidunggappattu, tharaiyilea tha'l'lu'ndathu; keezhkkaat'rinaal athin kani kaaynthupoayit'ru; athin balaththa koppuga'l mu'rinthu, pattuppoayina; akkini avaiga'laip padchiththathu.
Tamil OV
ஆனாலும் அது உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு தரையில் வீசியெறியப்பட்டது. சூடான கிழக்குக் காற்று வந்து பழங்களை காய வைத்தது. பலமான கிளைகள் ஒடிந்தன. அவை நெருப்பில் எறியப்பட்டன.