Ezekiel 20:38 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கலகக்காரர்களையும், துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் நுழைவதில்லை; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனக்கு விரோதமாய் கலகம் செய்வோரையும் துரோகம் செய்வோரையும் உங்களைவிட்டு விலக்குவேன். அவர்கள் வாழும் நாட்டைவிட்டு அவர்களை நான் வெளியே கொண்டுவந்தாலும், அவர்கள் இஸ்ரயேல் நாட்டுக்குள் போகமாட்டார்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கலகக்காரர்களையும், துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் நுழைவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil Bible Romanised 2017
kalagakkaararaiyum thuroagiga'laiyum ungga'laivittup piriththuppoaduvean; avarga'laith thaangga'l thanggum theasaththilirunthu pu'rappadappa'n'nuvean; aanaalum avarga'l israveal theasaththil piraveasippathillai; appozhuthu naan karththar en'ru a'rinthuko'lveerga'l.
Tamil OV
கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் எனக்கு எதிராகத் திரும்பி பாவம் செய்தவர்களை விலக்குவேன். நான் அவர்களை உங்கள் தாய்நாட்டிலிருந்து விலக்குவேன். அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”