Ezekiel 20:39 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்போதும் இஸ்ரவேல் மக்களே, நீங்கள் என்னுடைய சொல்லைக்கேட்க மனதில்லாமல் இருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் அசுத்தமான சிலைகளை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என்னுடைய பரிசுத்த பெயரை உங்களுடைய காணிக்கைகளாலும் உங்களுடைய அசுத்தமான சிலைகளாலும் இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களுக்கோ ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நீங்கள் எனக்குச் செவிகொடாவிட்டால் போங்கள், நீங்கள் ஒவ்வொருவரும்போய் உங்கள் விக்கிரகங்களுக்குப் பணிசெய்யுங்கள். ஆனாலும், அதன்பின்பு உங்கள் கொடைகளினாலும், விக்கிரகங்களினாலும் இனியொருபோதும் என் பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்க வேண்டாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் எனக்குச் செவிகொடுப்பீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்போதும் இஸ்ரவேல் மக்களே, நீங்கள் என்னுடைய சொல்லைக்கேட்க மனதில்லாமல் இருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் அசுத்தமான சிலைகளை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என்னுடைய பரிசுத்த பெயரை உங்களுடைய காணிக்கைகளாலும் உங்களுடைய அசுத்தமான சிலைகளாலும் இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Bible Romanised 2017
ippoathum israveal vamsaththaarea, neengga'l en sollaikkeadka manathillaathirunthaal, neengga'l poay, avanavan than than naragalaana vikkiragangga'lai innum seaviyungga'l; aanaalum en parisuththa naamaththai ungga'l kaa'nikkaiga'laalum ungga'l naragalaana vikkiragangga'laalum inip parisuththakkulaichchalaakkaathirungga'l en'ru karththaraagiya aa'ndavar sollugi'raar.
Tamil OV
இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக்கேட்க மனதில்லாதிருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப்பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இப்பொழுது, இஸ்ரவேல் குடும்பத்தினரே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “எவராவது தம் அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளவேண்டுமானால், அவன் போய் தொழுதுகொள்ளட்டும். ஆனால் பிறகு, என்னிடமிருந்து ஆலோசனை கிடைக்கும் என்று எண்ண வேண்டாம்! இனிமேலும் எனது நாமத்தை உங்கள் அன்பளிப்புகளாலும், உங்கள் விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுத்த முடியாது.”