Ezekiel 20:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களில் அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமல் இருப்பீர்களாக; உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அவர்களுடன் சொன்னேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கவர்ந்த இழிவான உருவச்சிலைகளை விலக்கிவிடுங்கள். எகிப்தின் விக்கிரகங்களால் உங்களை கறைப்படுத்தாதிருங்கள். உங்கள் ஆண்டவராகிய யெகோவா நானே” என்றும் கூறினேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்களில் அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமல் இருப்பீர்களாக; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களுடன் சொன்னேன்.
Tamil Bible Romanised 2017
ungga'lil avaravar thangga'l ka'nga'laal noakkina aruvaruppuga'laith tha'l'livittu, egipthin naragalaana vikkiragangga'laal ungga'laith theettuppaduththaathiruppeerga'laaga; ungga'l theavanaagiya karththar naan en'ru avarga'loadea sonnean.
Tamil OV
உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். “நானே உங்களது தேவனாகிய கர்த்தர்.”