Ezekiel 21:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் அதிகமாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் சம்பவிக்கக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இருதயங்கள் உருகி அநேகர் விழும்படியாக, அவர்கள் வாசல்களிலெல்லாம் படுகொலைக்காக நான் வாளை நிலைப்படுத்தியுள்ளேன். அது துலக்கப்பட்டு மின்னல் கீற்றுப்போல் பாய்வதற்காகத் தீட்டப்பட்டு, படுகொலைக்கு ஆயத்தமாகக் கையில் பிடிக்கப்பட்டுள்ளது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் அதிகமாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் சம்பவிக்கக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.
Tamil Bible Romanised 2017
avarga'ludaiya iruthayam karainthu, avarga'ludaiya idaiyoo'ruga'l thira'laagumpadi, pattayaththin koormaiyai avarga'ludaiya ellaa vaasalga'lukkum nearidak katta'laiyiduvean; aa, athu minnumpadiyaagap pathamidappattathu, vettumpadiyaagath theettivaikkappattathu.
Tamil OV
அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் திரளாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் நேரிடக்கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும். மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள். நகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும். ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும். இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது!