Ezekiel 23:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் எல்லோரும் தங்களுடைய பிறப்பிடமான கல்தேயாவில் உள்ள பாபிலோனியர்களைப் போல தங்களுடைய இடுப்பில் வார்க்கச்சை கட்டினவர்களும், தங்களுடைய தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளை அணிந்தவர்களும், பார்வைக்கு படைத்தலைவர்களைப்போல தோற்றமுள்ளவர்களாக இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவை தங்கள் அரைகளில் கச்சைகளைக் கட்டி, தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளைத் தரித்தவர்களும், கல்தேயா நாட்டிலுள்ள பாபிலோனிய தேர்ப்படை அதிகாரிகளைப்போன்ற தோற்றம்முள்ளவர்களாக இருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் எல்லோரும் தங்களுடைய பிறப்பிடமான கல்தேயாவில் உள்ள பாபிலோனியர்களைப் போல தங்களுடைய இடுப்பில் வார்க்கச்சை கட்டினவர்களும், தங்களுடைய தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளை அணிந்தவர்களும், பார்வைக்கு படைத்தலைவர்களைப்போல தோற்றமுள்ளவர்களாக இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'l ellaarum thangga'l jenmatheasamaagiya kaltheayaavil u'l'la baabiloan puththirarin saayalaagath thangga'l araiga'lil kachchai kattinavarga'lum, thangga'l thalaiga'lil saayantheerntha periya paagaiga'laith thariththavarga'lum, paarvaikku raajakumaararga'lumaaga irunthaarga'l.
Tamil OV
அவர்கள் எல்லாரும் தங்கள் ஜென்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் தம் இடுப்பைச்சுற்றி கச்சை அணிந்திருந்தனர். தலையில் நீண்ட தலைப் பாகை அணிந்தனர். அவர்கள் அனைவரும் தேரோட்டிகளைப்போன்று காட்சி தந்தனர். அவர்கள் அனைவரும் பாபிலோனில் பிறந்தவர்களின் சாயலில் இருந்தனர்.