Ezekiel 23:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உனக்கு விரோதமாக என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்துவேன்; அவர்கள் உன்னை கடுங்கோபமாக நடத்தி, உன்னுடைய மூக்கையும் உன்னுடைய காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் வாளால் வெட்டப்பட்டுபோவார்கள்; அவர்கள் உன்னுடைய மகன்களையும் உன்னுடைய மகள்களையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் நெருப்புக்கு இரையாவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் என் எரிச்சலின் கோபத்தை உனக்கு விரோதமாய்த் திருப்புவேன். அவர்கள் உன்னை ஆவேசத்துடன் நடத்துவார்கள். உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துவிடுவார்கள். உன்னில் எஞ்சியிருப்போர் வாளினால் மடிவார்கள். அவர்கள் உன் மகன்களையும் மகள்களையும் கைதிகளாகக் கொண்டுபோவார்கள். இன்னும் உன்னில் எஞ்சியிருப்போர் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உனக்கு விரோதமாக என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்துவேன்; அவர்கள் உன்னை கடுங்கோபமாக நடத்தி, உன்னுடைய மூக்கையும் உன்னுடைய காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் வாளால் வெட்டப்பட்டுபோவார்கள்; அவர்கள் உன்னுடைய மகன்களையும் உன்னுடைய மகள்களையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் நெருப்புக்கு இரையாவார்கள்.
Tamil Bible Romanised 2017
unakku viroathamaaga en erichchalai vi'langgappa'n'nuvean; avarga'l unnai ukkiramaay nadappiththu, un mookkaiyum un kaathuga'laiyum a'ruththuppoaduvaarga'l; unnil meethiyaayiruppavarga'l pattayaththaal vettu'ndupoavaarga'l; avarga'l un kumaararaiyum un kumaaraththiga'laiyum pidiththukko'l'luvaarga'l; unnil meethiyaayiruppavarga'l akkinikku iraiyaavaarga'l.
Tamil OV
உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் எவ்வளவு பொறாமையுள்ளவன் என்பதை உனக்குக் காட்டுவேன். அவர்கள் மிகவும் கோபம்கொண்டு உன்னைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உனது மூக்கையும் காதுகளையும் வெட்டுவார்கள். அவர்கள் வாளைப் பயன்படுத்தி உன்னைக் கொல்லுவார்கள். பிறகு உனது பிள்ளைகளை எடுத்துக்கொள்வார்கள். பிறகு விடுபட்டுள்ள உனக்குரியவற்றை எரிப்பார்கள்.