Ezekiel 24:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னுடைய அசுத்தத்துடன் முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாததினால், இனி என்னுடைய கடுங்கோபம் உன்னில் தணிந்துமுடியும் வரை உன்னுடைய அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘இப்பொழுது காமவேட்கையே உன் அசுத்தம். ஏனெனில் நான் உன்னைத் தூய்மைப்படுத்த முயன்றேன். ஆனால் நீயோ, உன் அசுத்தத்தில் இருந்து தூய்மையடைய மறுத்தாய். ஆகையால் உனக்கெதிராக இருக்கும் என் கோபம் தீருமட்டும், மறுபடியும் நீ தூய்மையடையமாட்டாய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன்னுடைய அசுத்தத்துடன் முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாததினால், இனி என்னுடைய கடுங்கோபம் உன்னில் தணிந்துமுடியும் வரை உன்னுடைய அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
Tamil Bible Romanised 2017
un asuththaththoadea mu'raikeadum irukki'rathu; naan unnaich suththigariththum, nee suththamaagaathapadiyinaal, ini en ukkiram unnil aa'riththeerumattum un asuththam neenggich suththigarikkappadamaattaay.
Tamil OV
உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“‘நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய். அதனால் பாவக்கறையோடு உள்ளாய். நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன். ஆனால் அழுக்கு வெளியேறவில்லை. எனது கோபநெருப்பு தணியும்வரை நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்!