Ezekiel 24:21 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, உங்களுடைய பலத்தின் முக்கியமும் உங்களுடைய கண்களின் விருப்பமும் உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்களுடைய மகன்களும் உங்களுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே என இஸ்ரயேல் குடும்பத்தாருக்குச் சொல். ‘நீங்கள் பெருமைகொள்ளும் அரணும், உங்கள் கண்களின் அருமையும், உங்கள் பிரியமான பொருளுமான என் பரிசுத்த ஆலயத்தின் தூய்மையை நான் கெடுக்கப்போகிறேன். நீங்கள் யூதாவில் விட்டுவந்த மகன்களும், மகள்களும் வாளினால் மடிவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, உங்களுடைய பலத்தின் முக்கியமும் உங்களுடைய கண்களின் விருப்பமும் உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்களுடைய மகன்களும் உங்களுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்.
Tamil Bible Romanised 2017
nee israveal veettaarai noakki, karththaraagiya aa'ndavar uraikki'rathu ennaven'raal, ithoa, ungga'l balaththin mukkiyamum ungga'l ka'nga'lin viruppamum ungga'l aaththumaavin vaagnchaiyumaagiya en parisuththa sthalaththai naan parisuththakkulaichchalaakkugi'rean; neengga'l vittuvantha ungga'l kumaararum ungga'l kumaaraththiga'lum pattayaththaal vizhuvaarga'l.
Tamil OV
நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் சொல்லச் சொன்னார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: ‘பார், நான் எனது பரிசுத்தமான இடத்தை அழிப்பேன். அந்த இடத்தைப்பற்றி பெருமைப்படுகிறீர்கள். அதைப்பற்றிப் புகழ்ந்து பாடுகிறீர்கள். அந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் நான் அந்த இடத்தை அழிப்பேன். நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் பிள்ளைகளைப் போரில் கொல்வேன்.