Ezekiel 26:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தீருவுக்குக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆண்டவராகிய யெகோவா தீருவுக்குக் கூறுவது இதுவே. உன்னில் காயப்பட்டோர் அழுகிறபோதும், படுகொலைகள் நடக்கும்போதும், நீ விழும் சத்தத்தினால் கரையோர நாடுகள் நடுங்காதோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Tamil Bible Romanised 2017
theeruvukkuk karththaraagiya aa'ndavar uraikki'rathu ennaven'raal: kaayampattavarga'l ala'rumpoathum, un naduvil sanggaaram nadakkumpoathum, nee vizhugi'ra saththaththinaal theevuga'l athiraathoa?
Tamil OV
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது கர்த்தராகிய ஆண்டவர் தீருக்கு இதைக் கூறுகிறார்: “மத்தியதரை கடலோரங்களிலுள்ள நகரங்கள் எல்லாம் நீ விழுகிற சப்தம் கேட்டு நடுங்கும். உன் ஜனங்கள் காயமும் மரணமும் அடையும்போது இது நிகழும்.