Ezekiel 26:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ, உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு அவர்கள் உன்னைக்குறித்து புலம்பல் வைத்து, “ ‘கடல் மனிதர்களால் நிறைந்து பேர்பெற்ற நகரமே, நீ எவ்வளவாய் அழிந்துபோனாய்? நீயும் உன் குடிமக்களும் கடலில் வலிமையுடையவர்களாய் இருந்தீர்கள். அங்கு வாழ்ந்தவர்களையெல்லாம் நீங்கள் திகிலடையச் செய்தீர்களே!
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ!
Tamil Bible Romanised 2017
avarga'l unnimiththam pulambi, unnaik ku'riththu: kadal sagnchaariga'l kudiyiruntha pugazhpet'ra nagariyea, aiyoa! unnil thangginavarga'lukkellaam bayamu'ndaakkina un kudiga'loadungkoodach samuththiraththilea balaththiruntha nee azhinthupoanaayoa!
Tamil OV
அவர்கள் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்பெற்ற நகரியே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன் குடிகளோடுங்கூடச் சமுத்திரத்திலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ!
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் உன்னைப்பற்றி இச்சோகப் பாடலைப் பாடுவார்கள்: “‘ஓ தீருவே, நீ புகழ்பெற்ற நகரமாக இருந்தாய். ஜனங்கள் உன்னிடம் வாழக் கடல் கடந்து வந்தனர். நீ புகழோடு இருந்தாய். இப்போது நீ போய்விட்டாய்! கடலில் நீ பலத்தோடு இருந்தாய். உன்னில் வாழ்பவர்களும் அப்படியே இருந்தார்கள். முக்கிய நிலத்தில் வாழ்பவர்களையெல்லாம் பயமுறுத்தினாய்.