Ezekiel 26:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளுடனும், இரதங்களுடனும், குதிரைவீரர்களுடனும் கூட்டத்தோடும் அதிகமான மக்களுடனும் தீருவுக்கு விரோதமாக வரச்செய்வேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் அரசருக்கெல்லாம் அரசனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், பெரும் இராணுவப்படை ஆகியவற்றோடு வடக்கேயிருந்து தீருவுக்கு விரோதமாய்க் கொண்டுவரப் போகிறேன்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளுடனும், இரதங்களுடனும், குதிரைவீரர்களுடனும் கூட்டத்தோடும் அதிகமான மக்களுடனும் தீருவுக்கு விரோதமாக வரச்செய்வேன்.
Tamil Bible Romanised 2017
karththaraagiya aa'ndavar sollugi'rathu ennaven'raal: ithoa, naan raajaathiraajaavaagiya neabukaathneachchaar ennum baabiloan raajaavai vadakkeayirunthu kuthiraiga'loadum irathangga'loadum kuthiraiveeraroadum koottaththoadum thira'laana janaththoadum theeruvukku viroathamaaga varappa'n'nuvean.
Tamil OV
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தீருவுக்கு விரோதமாக வடக்கிலிருந்து பகைவரை வரவழைப்பேன். அப்பகைவன், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்! அவன் பெரும்படையைக் கொண்டுவருவான். அதில் குதிரைகள், இரதங்கள், குதிரை வீரர்கள், மற்றும் ஏராளமான வீரர்களும் இருப்பார்கள்! அவ்வீரர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள்.