Ezekiel 27:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால், உனக்குத் துடுப்புகளைச் செய்தார்கள். சைப்பிரஸின் கடற்கரைகளிலிருந்து பெற்ற சவுக்கு மரங்களினால் அவர்கள் உன் கப்பல் தளத்தைக் கட்டி, யானைத் தந்தத்தினால் அதை அலங்கரித்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
baasaanin karvaalimarangga'linaalea un thuduppuga'laich seythaarga'l; kiththeem theevuga'lilirunthu vantha aashoor maraththaal un vaaripalagaiga'laich seythu, athilea yaanaiththantham azhuththiyirunthaarga'l.
Tamil OV
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வாரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பாசானின் கர்வாலி மரங்களினால் உன் துடுப்புகளைச் செய்தார்கள். சீப்புரு தீவுகளிலிருந்து கொண்டு வந்த பைன்மரத்தால் உன் கப்பல் தளத்தை செய்தார்கள். அதனை அவர்கள் தந்தங்களால் அலங்காரம் செய்தனர்.