Ezekiel 27:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட வேலைப்பாடமைந்த மென்பட்டு, உனது பாயாகவும் கொடியாகவும் இருந்தது. எலீஷாவின் கரையோரங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீலத் துணியும், கருஞ்சிவப்புத் துணியும் உனக்குக் கூடாரமாயின.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.
Tamil Bible Romanised 2017
egipthilirunthu vantha siththiraththaiyalu'l'la sa'nalnool pudavai nee viriththa paayaayirunthathu; eleesaa theevuga'lin i'laneelamum iraththaambaramum un vithaanamaayirunthathu.
Tamil OV
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உன் பாய்க்காக எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையல் உள்ள சணல் நூல் புடவையைப் பயன்படுத்தினார்கள். அந்தப் பாய் தான் உன் கொடியாக இருந்தது. உன் அறையின் திரைச் சீலை நீலமும் சிவப்புமாக இருந்தது. அவை சீப்புரு தீவிலிருந்து வந்தது.