Ezekiel 28:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரச்செய்வேன்; அதற்கு விரோதமாகச் சுற்றிலும் வந்த வாளினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டப்பட்டு விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் அவள்மீது கொள்ளைநோயை அனுப்பி, அவளுடைய வீதிகளில் இரத்தத்தை ஓடப்பண்ணுவேன். ஒவ்வொரு திசையிலுமிருந்து அவளுக்கெதிராக வரும் வாளினால் கொல்லப்படுவோர், அவள் மத்தியில் விழுவார்கள். அப்பொழுது மனிதர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரச்செய்வேன்; அதற்கு விரோதமாகச் சுற்றிலும் வந்த வாளினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டப்பட்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Tamil Bible Romanised 2017
naan athilea ko'l'lainoayaiyum, athin veethiga'lil iraththaththaiyum varappa'n'nuvean; atha'rku viroathamaaych sut'rilum vantha pattayaththinaal kaayampattavarga'l athin naduvilea vettu'ndu vizhuvaarga'l; appozhuthu naan karththar en'ru a'rinthuko'lvaarga'l.
Tamil OV
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் சீதோனுக்கு நோயையும் மரணத்தையும் அனுப்புவேன். நகரத்தில் பலர் மரிப்பார்கள். பலர் (பகைவீரர்) வாளால் நகரத்திற்கு வெளியில் கொல்லப்படுவார்கள். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!’”