Ezekiel 29:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன்னுடைய சேனையினிடத்தில் கடும் வேலை வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையானது; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த வேலையினால் அவனுக்கோ அவனுடைய சேனைக்கோ கூலி கிடைக்கவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“மனுபுத்திரனே, பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தனது இராணுவத்தைத் தீருவுக்கு விரோதமாய் அனுப்பி, கடும் தாக்குதலை மேற்கொண்டான். ஒவ்வொருவனின் தலையும் மொட்டையாக்கப்பட்டு, ஒவ்வொருவனின் தோலும் புண்ணாகும்வரை தோலுரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவனும் அவனுடைய இராணுவமும், தீருவுக்கு எதிராக நடத்திய படையெடுப்பின் பலனைப் பெறவில்லை.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன்னுடைய சேனையினிடத்தில் கடும் வேலை வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையானது; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த வேலையினால் அவனுக்கோ அவனுடைய சேனைக்கோ கூலி கிடைக்கவில்லை.
Tamil Bible Romanised 2017
manupuththiranea, baabiloan raajaavaagiya neabukaathneachchaar theeruvin munnea than seanaiyinidaththil kadum oozhiyam vaangginaan; ovvoru thalaiyum mottaiyaayit'ru; ovvoru thoa'lpattaiyin thoalum urinthupoayit'ru; aanaalum avan theeruvukku viroathamaagach seytha oozhiyaththinaalea avanukkaavathu avan seanaikkaavathu kooli kidaikkavillai.
Tamil OV
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோளும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினால் அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தீருவுக்கு எதிராகத் தன் படையைக் கடுமையாகப் போரிடுமாறு செய்தான். அவர்கள் எல்லா வீரர்களின் தலைகளையும் மொட்டையடித்தனர். ஒவ்வொருவரின் தோளும் பாரமான தடிகள் சுமந்து தோல் உரிந்துபோனது, நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் தீருவைத் தோற்கடிக்கக் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அக்கடும் வேலையால் அவர்கள் எதையும் பெறவில்லை.”