Ezekiel 29:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னுடைய வாயிலே துறடுகளை மாட்டி, உன்னுடைய நதிகளின் மீன்களை உன்னுடைய செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன்னுடைய நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன்னுடைய நதிகளின் மீன்கள் எல்லாம் உன்னுடைய செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் நான் உன் தாடைகளில் தூண்டில் மாட்டி, உன் நீரோடைகளின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன். உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும் எல்லா மீன்களோடும் சேர்த்து, உன் நீரோடைகளின் நடுவிலிருந்து நான் உன்னை இழுத்தெடுப்பேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன்னுடைய வாயிலே துறடுகளை மாட்டி, உன்னுடைய நதிகளின் மீன்களை உன்னுடைய செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன்னுடைய நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன்னுடைய நதிகளின் மீன்கள் எல்லாம் உன்னுடைய செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
Tamil Bible Romanised 2017
un vaayilea thu'raduga'lai maatti, un nathiga'lin machchangga'lai un sethi'lga'lil ottikko'l'lumpadi seythu, unnai un nathiga'lin naduvilirunthu thookkividuvean; un nathiga'lin machchangga'lellaam un sethilga'lil ottikko'ndirukkum.
Tamil OV
உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“‘ஆனால் நான் உனது வாயில் கொக்கியைப் போடுவேன். நைல் நதியிலுள்ள மீன் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும். நான் உன்னையும் உனது மீனையும் நதியை விட்டு வெளியே இழுத்து, வறண்ட நிலத்தில் போடுவேன். நீ தரையில் விழுவாய். உன்னை எவரும் எடுக்கவோ புதைக்கவோமாட்டார்கள். நான் உன்னைக் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பேன். நீ அவற்றின் உணவு ஆவாய்.