Ezekiel 33:22 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த மனிதன் வருவதற்கு முந்திய நாள் சாயங்காலம் யெகோவாவின் கரம் என்மேல் வந்தது. காலையில் அம்மனிதன் என்னிடம் வருமுன் அவர் என் வாயைத் திறந்தார். என் வாய் திறக்கப்பட்டிருந்தபடியினால் நான் மவுனமாயிருக்கவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை.
Tamil Bible Romanised 2017
thappinavan varugi'ratha'rku munthina saayanggaalaththilea karththarudaiya kai enmeal amarnthu, avan kaalaiyil ennidaththil varumattum en vaayaith thi'ranthirukkappa'n'nit'ru; en vaay thi'rakkappattathu, pinbu naan maunamaayirukkavillai.
Tamil OV
தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மௌனமாயிருக்கவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவரின் வல்லமை, அந்த ஆள் என்னிடம் வருவதற்கு முன் மாலையில், என் மேல் வந்திருந்தது, தேவன் என்னை பேச முடியாதவாறு செய்திருந்தார். அந்த ஆள் என்னிடம் வந்தபோது, கர்த்தர் என் வாயைத் திறந்து மீண்டும் என்னைப் பேசும்படிச் செய்தார்.