Ezekiel 33:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதகுமாரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாக இருந்து, தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டான்; நாங்கள் அநேகராக இருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“மனுபுத்திரனே, இஸ்ரயேல் நாட்டில் அழிவு ஏற்பட்ட நகரங்களில் எஞ்சி வாழும் மக்கள், ‘ஆபிரகாம் ஒரே ஒரு மனிதனாக இருந்தும் முழு நாட்டையும் உரிமையாக்கிக் கொண்டானே; நாங்களோ அநேகராய் இருக்கிறோம். நிச்சயமாக இப்பொழுது நாடு எங்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதல்லவா’ என்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மனிதகுமாரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாக இருந்து, தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டான்; நாங்கள் அநேகராக இருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
Tamil Bible Romanised 2017
manupuththiranea, israveal theasaththin paazhaana idangga'lilu'l'la kudiga'l: aabirahaam oruvanaayirunthu, theasaththaich suthanthariththukko'ndaan; naangga'l aneagaraayirukki'roam, engga'lukku inthath theasam suthantharamaagak kodukkappattathu en'ru sollugi'raarga'l.
Tamil OV
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“மனுபுத்திரனே, இஸ்ரவேலின் அழிந்த நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்கின்றனர். அந்த ஜனங்கள், ‘ஆபிரகாம் ஒருவனாயிருந்தான். தேவன் அவனிடம் இந்த நாடு முழுவதையும் கொடுத்தார். இப்பொழுது நாங்கள் பலராக இருக்கிறோம். எனவே உறுதியாக இந்நாடு எங்களுக்குச் சொந்தம்! இது எங்கள் நாடு!’ என்கிறார்கள்.