Ezekiel 34:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் வாழ்வது நிச்சயம்போலவே, என் மந்தைக்கு மேய்ப்பனொருவன் இல்லாத காரணத்தால் அவை களவாடப்பட்டன. அவை காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின. என் மேய்ப்பர்கள் என் மந்தையைத் தேடாமல் என் மந்தையைப் பார்க்கிலும் தங்களையே கவனிக்கிறார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தராகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
Tamil Bible Romanised 2017
karththaraagiya aa'ndavaraayirukki'ra naan en jeevanaikko'ndu sollugi'rean; meayppan illaathathinaal en aaduga'l soo'raiyaagi, en aaduga'l kaattumirugangga'lukkellaam iraiyaayp poayina; en meaypparga'l en aaduga'lai visaariyaama'rpoanaarga'l, meaypparga'l manthaiyai meaykkaamal thangga'laiyea meayththaarga'l.
Tamil OV
கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“என் உயிரைக்கொண்டு, நான் உனக்கு இந்த வாக்கையளிக்கிறேன். காட்டு மிருகங்கள் என் மந்தையைப் பிடித்தது. ஆம், எனது மந்தை காட்டு மிருகங்களுக்கு உணவாகியது. ஏனென்றால், அவற்றுக்கு உண்மையான மேய்ப்பன் இல்லை. எனது மேய்ப்பர்கள் எனது மந்தையை கவனிக்கவில்லை. இல்லை, அம்மேய்ப்பர்கள் ஆடுகளைத் தின்று தமக்கு உணவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் என் மந்தையை மேய்க்கவில்லை.”