Ezekiel 36:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்நியமக்களின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தம்செய்யும்பொழுது; அப்பொழுது அந்நியமக்கள் தங்களுடைய கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் செய்யப்படும்போது, நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாடுகளின் மத்தியில் அசுத்தப்படுத்தப்பட்டதும், அவர்கள் மத்தியில் நீங்கள் அசுத்தப்படுத்தியதுமான என் மகத்துவமான பெயரின் பரிசுத்தத்தை நான் காண்பிப்பேன். அவர்கள் கண்களுக்கு முன்பாக, உங்கள் மூலமாக நான் என்னைப் பரிசுத்தராய்க் காண்பிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்நியமக்களின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தம்செய்யும்பொழுது; அப்பொழுது அந்நியமக்கள் தங்களுடைய கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் செய்யப்படும்போது, நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Bible Romanised 2017
pu'rajaathiga'lin naduvea neengga'l parisuththakkulaichchalaakkinathum avarga'lukku'l ungga'laal parisuththakkulaichchalaakkappattathumaana en magaththaana naamaththai naan parisuththampa'n'nuvean; appozhuthu pu'rajaathiga'l thangga'l ka'nga'lukku munbaaga naan ungga'lukku'l parisuththampa'n'nappadugaiyil, naan karththar enbathai a'rinthuko'lvaarga'l en'ru karththaraagiya aa'ndavar sollugi'raar.
Tamil OV
புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது பெரும் நாமம் உண்மையில் பரிசுத்தமானது என்பதை அந்த நாடுகளுக்குக் காட்டப்போகிறேன். நீங்கள் அந்நாடுகளில் என் நாமத்தைப் பாழாக்கீனீர்கள். ஆனால் நான் பரிசுத்தமானவர் என்பதை காட்டுவேன். நீங்கள் என் நாமத்தை மதிக்கும்படி செய்வேன். பிறகு அந்த நாட்டவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.