Ezekiel 36:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது நீங்கள் உங்களுடைய பொல்லாத மார்க்கங்களையும் உங்களுடைய தகாத செயல்களையும் நினைத்து, உங்களுடைய அக்கிரமங்களுக்காக உங்களுடைய அருவருப்புகளுக்காக உங்களையே வெறுப்பீர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது நீங்கள் உங்கள் பழைய தீயவழிகளையும், கொடிய செயல்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் பாவங்களுக்காகவும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் உங்களை வெறுப்பீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது நீங்கள் உங்களுடைய பொல்லாத மார்க்கங்களையும் உங்களுடைய தகாத செயல்களையும் நினைத்து, உங்களுடைய அக்கிரமங்களுக்காக உங்களுடைய அருவருப்புகளுக்காக உங்களையே வெறுப்பீர்கள்.
Tamil Bible Romanised 2017
appozhuthu neengga'l ungga'l pollaatha maarkkangga'laiyum ungga'l thagaatha kiriyaiga'laiyum ninaiththu, ungga'l akkiramangga'linimiththamum ungga'l aruvaruppuga'linimiththamum ungga'laiyea aroasippeerga'l.
Tamil OV
அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீங்கள் செய்த கெட்டவற்றை நினைப்பீர்கள். நீங்கள் அவை நல்லவை அல்ல என நினைப்பீர்கள். பிறகு நீங்களே உங்களை வெறுப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த பாவங்களும் பயங்கரமான செயல்களும் மிகுதி.”