Ezekiel 38:14 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் சுகமாகக் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆதலால் மனுபுத்திரனே, நீ இறைவாக்குரைத்து, கோகு என்பவனுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’ அந்நாளிலே என் மக்களாகிய இஸ்ரயேலர் பாதுகாப்பாக வாழ்வதை நீ கண்டு, எழுந்து
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் சுகமாகக் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?
Tamil Bible Romanised 2017
aagaiyaal manupuththiranea, nee theerkkatharisanam uraiththu, koagai noakkich sollavea'ndiyathu ennaven'raal: karththaraagiya aa'ndavar uraikki'raar; en janamaagiya israveal sugamaayk kudiyirukki'ra akkaalaththilea nee athai a'rivaay allavoa?
Tamil OV
ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய்.