Ezekiel 38:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் உன்னைத் திருப்பி, உன்னுடைய வாயில் கடிவாளங்களைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் படையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், சிரியகேடகங்களும் பெரிய கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படச்செய்வேன்; அவர்கள் எல்லோரும் வாள்களைப் பிடித்திருப்பார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் உன்னைத் திருப்பி, உன் தாடைகளில் கொக்கியை மாட்டி, உன்னை உனது முழு இராணுவத்தோடும் உன் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவருவேன். அத்துடன் உன் குதிரைகளும், ஆயுதம் தாங்கிய உன் குதிரைவீரரும், பெரிதும் சிறிதுமான கேடயங்கைளப் பிடித்த பெருங்கூட்டமும் உன்னுடன் வருவார்கள். அவர்கள் அனைவரும் வாளைவீச ஆயத்தமாய் வருவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் உன்னைத் திருப்பி, உன்னுடைய வாயில் கடிவாளங்களைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் படையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், சிரியகேடகங்களும் பெரிய கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படச்செய்வேன்; அவர்கள் எல்லோரும் வாள்களைப் பிடித்திருப்பார்கள்.
Tamil Bible Romanised 2017
naan unnaith thiruppi, un vaayil thu'raduga'laip poattu, unnaiyum unnudaiya ellaach seanaiyaiyum, kuthiraiga'laiyum, sarvaayuthanthariththa kuthiraiveerarga'laiyum, parisaiyum keadagamumudaiya thira'laana koottaththaiyum pu'rappadappa'n'nuvean; avarga'l ellaarum pattayangga'laip pidiththiruppaarga'l.
Tamil OV
நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும் குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள்.