Ezekiel 39:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் அவர்களை மக்கள் கூட்டங்களிலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களுடைய எதிரிகளின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் அவர்களை மறுபடியும் நாடுகளிலிருந்து கொண்டுவரும்போதும், அவர்களுடைய பகைவர்களின் தேசங்களிலிருந்து கூட்டிச் சேர்க்கும்போதும், அவர்கள் மூலமாக அநேக நாடுகளின் பார்வையில் நானே பரிசுத்தர் என்பதைக் காண்பிப்பேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் அவர்களை மக்கள் கூட்டங்களிலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களுடைய எதிரிகளின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
Tamil Bible Romanised 2017
naan avarga'lai janasatha'langga'lilirunthu thirumbivarappa'n'ni, avarga'ludaiya pagaignarin theasangga'lilirunthu avarga'laik koottikko'nduvanthu, thira'laana jaathiga'ludaiya ka'nga'lukku munbaaga avarga'lukku'l naan parisuththar en'ru vi'langgumpoathu,
Tamil OV
நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் மற்ற நாடுகளிலிருந்து என் ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன். அவர்களின் பகைவரது நாடுகளிலிருந்து அவர்களை ஒன்று கூட்டுவேன். பிறகு, பல நாடுகள் நான் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் காணும்.